கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்லாத மாமனிதர் கல்விஜோதி சிறப்பு
மாணவச்செல்வங்களே! எதிர்கால ஒளிவிளக்கே! இந்தியாவின் கலங்கரை விளக்கே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துக்கள்! கலங்காத மாமனிதரின் எண்ணத்தில் உருவான கல்வி பட்டறையில், பட்டை தீட்டப்பட்டு ஜொலிக்கும் வைரக்கற்களே உங்கள் உள்ளத்தின் ஒளிச்சுடர்... அந்த மாமனிதரின் கனவை நினவாக்கி ஒளிர்வித்து சுடரவைக்கும் கல்விஜோதி என்றும் நம்பிக்கையோடு அவரின் ஆசீர்வாதத்துடன் வழி நடத்திச்செல்லும். எனது கனவுச் செல்வங்களே! உங்கள் வாயிலிருந்து உதிரும் வைரம், ஏ.ஆர்.ஜெ. அதுதான் எங்களின் (உங்களின்) வெற்றி. இதை நினைத்துப் பெருமைப்படும் எங்கள் உள்ளம். வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
அ. ராஜகுமாரி,
தலைவர்
அன்னை அம்மணி அம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஏ.ஆர்.ஜெ. கல்விக்குழுமம்